உன்னை காணும் இயேசு ராஜன்

 

உன்னை காணும் இயேசு ராஜன்

உன் நடுவில் இருக்கிறார்

உந்தன் மேல் மனதுருகி

இன்று அற்புதம் செய்கிறார்

 

     விடுதலை இன்று விடுதலை

     இயேசு ராஜாவின் நாமத்தாலே -2

     நுகங்கள் எல்லாம் முறியுதே

     அவர் அற்புத வல்லமையால் - உன்னை

 

நொறுங்கிப் போன உந்தன் இதயம் கண்டு

உன் அருகில் வருகிறார்  -2

அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து

உந்தன் காயம் கட்டுகிறார் - 3

 

உந்தன் சிறையிருப்பைக் கண்டு மனதுருகி

விடுதலை தருகிறார்    -2

உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட

இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் - 3 

 

துயரப்படுகின்ற உன்னை தேற்றி அவர்

ஆறுதல் தருகிறார்      -2 

நோயின் கொடுமையால் வாடும் உன்னை-இயேசு

குணமாக்க வருகிறார் -இன்று -2

நல்ல துதி ஆடை தருகிறார்